20 வகையான அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் புதிய உறுப்பினர் பதிவு செய்தல்.
சேவை விவரம் & நன்மைகள்
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் அரசு வழங்கும் கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி, மாதாந்திர முதியோர் ஓய்வூதியம், விபத்து மற்றும் இயற்கை மரண நிவாரணம் உள்ளிட்ட அனைத்து நிதிப் பலன்களையும் நேரடியாகப் பெற முடியும்.
திட்டத்தின் நோக்கம்: 20 வகையான அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் புதிய உறுப்பினர் பதிவு செய்தல்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் (தகுதி வரம்பு)
18 வயதிற்கு மேல் மற்றும் 60 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 20 வகையான அமைப்பு சாரா தொழில்களில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
தேவையான அசல் ஆவணங்கள் (7)
விண்ணப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்களின் அசல் பிரதிகளை வைத்திருக்க வேண்டும்.
பிறந்த தேதிக்குரிய ஆவணம் (பள்ளி சான்று / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் / பிறப்பு சான்று)
குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)
ஆதார் அட்டை
நியமனதாரர் ஆவணம் (குடும்ப அட்டை / ஆதார் அட்டை)
பணிச்சான்று
நடப்பில் உள்ள வங்கி புத்தகம்
புகைப்படம் (ம) நேரடி புகைப்படம்
விண்ணப்பிக்கும் படிநிலைகள்
1
ஆவணங்களைத் தயார் செய்தல்
மேற்கண்ட ஆவணங்களின் அசல் பிரதிகளைத் தயார் செய்து, ஆதார் மற்றும் வங்கி கணக்கு பெயர்கள் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்தவும்.
2
விண்ணப்ப விவரங்களை உள்ளிடுதல்
கீழே உள்ள 'Apply Now' பொத்தானைக் கிளிக் செய்து இந்த சேவைக்கான குறிப்பிட்ட விண்ணப்ப விவரங்களை உள்ளிடவும்.
3
அருவி மையத்தில் நேரடி சரிபார்ப்பு
எங்கள் கோவில்பட்டி மையத்திற்கு நேரில் வந்து ஆவணங்களைச் சரிபார்த்து அதிகாரப்பூர்வ அரசு சமர்ப்பிப்பை நிறைவு செய்யவும்.